செப்.17.
Mohammed Siraj in the Powerplay in the Asia Cup final:
0,0,0,0,0,0 – 1st over
W,0,W,W,4,W – 2nd over
0,0,0,W,0,1 – 3rd over
1,0,0,0,0,0 – 4th over
0,1,0,0,0,0 – 5th over
One of the Greatest spells ever in ODI history,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலாவதாக களமிறங்கிய குசல் பெரேரா முதல் பந்திலேயே அவுட்டானார். தொடர்ந்து, பதும் நிசான்கா 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தனஞ்சயா டி சில்வா 4 ரன், குசல் மெடிஸ் 17 ரன்களில் அவுட் ஆனார்கள்.
ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள், மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் இலங்கை அணியை சுருட்டி வீசினார். இறுதியில்,15.2 ஓவரிலேயே வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி வீழ்ந்தது.
51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணியில் முதலாவதாக களமிறங்கிய இஷான் கிஷான் 17 பந்துகளில் 23 ரன்களும், ஷூப்மன் கில் 19 ரன்களில் 27 ரன்களும் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தனர். முடிவில், இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிப்பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.