டிச.6.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர், அபிராமி அம்மாள் உடனாகிய அமிர்தகடேசுவர சுவாமி திருக்கோயிலானது, பக்த மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்து மார்க்கண்டேயருக்கு “என்றும் சிரஞ்சீவியாக வாழும் வரம்” அருளியதும் அபிராமி பட்டருக்காக அமாவாசை பௌர்ணமி ஆகமமானது. சமய குரவர்களில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரும் அபிராமி பட்டராலும் பாடல் பெற்ற அட்டவீரட்டத் தலம்.
இத்திருக்கோயிலுக்குரூ.3 கோடி செலவில் 250 கிலோ வெள்ளியை கொண்டு உபயதாரர் ஜெயராமன் அவர்களால் புதிய வெள்ளித்தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதீன பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மாநில வல்லுநர் குழுவால் 10,799 திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குடமுழுக்கு நடைபெறும் 24 திருக்கோயில்களையும் சேர்த்து இதுவரை 2,342 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதனால் இந்த ஆட்சியை ஆன்மிக ஆட்சி என்று சொல்லாமல் வேறு எந்த ஆட்சி என்று சொல்ல முடியும். திருக்கோயில்களில் உள்ள 70 தங்க தேர்களும், 58 வெள்ளி தேர்களும் முழுமையாக பழுது நீக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் பயன்பாட்டில் உள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றபின் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்களும் ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோலபலநூறு கோடி மதிப்பீட்டில் புதிய மரத்தேர்களும், மரத்தேர் மரமத்து பணிகளும், திருத்தேர்களை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பு கொட்டகைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.