செப்.8.
கரூர் மண்மங்கலம் தாலுகா காதப்பாறை கிராமம் பெரிச்சிபாளையத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா 16ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெறுகிறது. பெரிச்சிபாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் அண்ணா நாடக மன்றத்தினர் சார்பில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் முன்னிட்டு (15.9.24)ஞாயிற்றுக்கிழமை அன்று தீர்த்தத்தின் போது குதிரை மற்றும் காங்கேயம் காளையின் நடனம், இரவு 7 மணியளவில் தீரன் பாரம்பரியம் ஒயிலாட்ட கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் சிறப்பாக நடைபெறும்.