2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைய மஸ்ரேயாஸ் ஐயர் காரணமாகி விட்டார். இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து அவுட் ஆனார்.
2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எப்படி ஆட்டமிழந்தாரோ, அதேபோல இந்த முறையும் ஆட்டமிழந்தார். இரண்டு முறையுமே அவர் பந்தை கவனமாக எதிர்கொள்ளவில்லை. மிகவும் சாவகாசமாக, வலைப் பயிற்சிகளில் பேட்டிங் செய்வது போல ஆடி விக்கெட் பறிகொடுத்தார். 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் ஆடிய நிலையில், இரண்டு விக்கெட் விழுந்ததும் நான்காம் வரிசையில் ஸ்ரேயாஸ் களமிறங்கினார். துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தாலும், அதிக பந்துகளை வீணடித்தனர். இதனால் அதிரடியாக ரன் குவிக்கும் அவசியம் ஏற்பட்டது.
இச்சூழலில் ரொமாரியோ வீசிய பந்தை ஸ்ரேயாஸ் தேர்ட் மேன் திசைக்கு தட்டி விட நினைத்து தாமதமாகவே அடிக்க முற்பட பந்து பேட்டின் விளிம்பில்பட்டு நேராக விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் செல்ல கேட்ச் பிடித்து அவுட் கேட்டு அம்பயரிடம் முறையிட்டார். அம்பயர் பந்து விளிம்பில் பட்டதா என உறுதியாக சொல்ல முடியாததால் அவுட் தர மறுத்தார். அப்போது அசால்ட்டாக ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்ததை ஒப்புக்கொண்டு தாமதிக்காமல் களத்தை விட்டு போய்விட்டார். இதுமிகப்பெரிய சொதப்பல் ஆனதால் ரன் ரேட் அழுத்தம் அதிகரித்துக் கொண்டேபோய் கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஷஷாங்க் சிங் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதை அடுத்து பஞ்சாப் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ், கூறியது-
மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினோம். அனைத்து பாராட்டுக்களும் நிர்வாகத்திற்கு தான் சேரும். ஒவ்வொரு வீரர்களும் அபாரமாக விளையாடினார்கள். இந்த தோல்வி வருத்தமாக இருக்கிறது. மேலும், எங்கள் அணியில் ஆதரவு ஊழியர்கள் முதல் உரிமையாளர்கள் வரை அனைவரும் சிறப்பானவர்கள். போட்டியை காண வந்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
கடந்த போட்டியை வைத்து பார்க்கும் பொழுது இங்கு 200 ரன்கள் சரியானதுதான் என நினைத்தேன். அவர்கள் அற்புதமாக பந்துவீசினார்கள். குருனால் பாண்டியா குறிப்பாக சிறப்பாக இருந்தார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது அதை பயன்படுத்தினார். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை (இங்கிலிஸ் விக்கெட்டை வீழ்த்தியது). எங்கள் இளம் வீரர்கள் ஒவ்வொருவர் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் அச்சமற்ற முறையில் விளையாடினார்கள். அடுத்த ஆண்டு திரும்பி வந்து சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வோம். எங்களால் மீண்டும் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என்றார்.
விராட் கோலி கூறுகையில், பெங்களூரு அணியுடனேயே என்னுடைய மனம், ஆன்மா இருக்கும். நான் ஐ.பி.எல்.லில் விளையாடும் வரை இந்த அணியிலேயே இருப்பேன். இன்றிரவு ஒரு குழந்தையை போல் உறங்குவேன் என்றார்.