அக்.21.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரியத்தில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார்.
அதை எக்ஸெல் சீட்டு அதாவது மின் வாரியத்திற்கு அனுப்பிய நிதி குறித்த விபரம் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மாநில தலைவராக இருப்பவர் எதையும் ஆதாரத்துடன் கூறவேண்டும் ஆதாரம் கேட்டால் மின்வாரியத்துக்கு நிதிஅனுப்பிய பட்டியலை வெளியிடுவதா என கேட்டுள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலம் தான் கூடுதல் விலை கொடுத்து அதிக மின்சாரத்தை வாங்கியது எனகுறிப்பிட்ட அவர் இதுபற்றி சரமாரி கேள்வி கேட்டுள்ளார் .
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர்பதிவு வருமாறு-
செப் 24 – அக் 19 வரை பயன்படுத்திய மின்சாரம் 6200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20/-க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ.20/-க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி.யூனிட்கள்.
கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அக் 18 அன்று இந்திய மின் சந்தையில் தமிழகம் வாங்கியது 7.66 மி.யூ. குஜராத் வாங்கியது 45 மி.யூ, மஹாராஷ்டிரா வாங்கியது 18 மி.யூ. ஹரியானா வாங்கியது 14 மி.யூ.
இந்திய மின் சந்தையில் அக் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ.1.99/- யூனிட். அதிகபட்ச விலை ரூ 8.50/- யூனிட், சராசரி ரூ.6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.