ஜூன்.3.
கரூர் மாவட்ட திமுக செயலாளர் எம்.எல்ஏ. செந்தில் பாலாஜி குளித்தலை நங்கவரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு மாயனூரில் நடைபெறும் விழாவிற்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது மேல மாயனூர் அருகே கரூரிலிருந்து வந்த காரும் எதிரே வந்த லாரியும் மோதியது. இதில் கார் சேதமடைந்தது. அந்த வழியாக வந்த செந்தில் பாலாஜி காரை நிறுத்திவிட்டு காயம் அடைதவர்களை தன்னுடன் வந்த நிர்வாகிகள் உதவியோடு மீட்டு தனது காரில் அவர்களை ஏற்றி சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.