ஏப்.21.
சட்டமன்ற பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார். ஆதாரம் இன்றி செய்திகளின் அடிப்படையில் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், கரூர் மாவட்டத்தில் சம்பவ இடத்திலேயே இல்லாத என் மீது கொலை முயற்சி வழக்கு உங்கள் ஆட்சியில் போடப்பட்டது. அதுவும் மாவட்ட ஆட்சியரை கொல்ல முயன்றதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்படி எல்லாம் இப்போது எதுவும் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் செயல்பட்டால் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று நேருக்கு நேர் விளாசினார்.