மே..18.
கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையினை கரூர் மாவட்ட கழக செயலாளர், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி .செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார்.
498 மதிப்பெண்கள் பெற்ற மாணவி வி.இந்துஜா, 495 மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்கள் ஜி.பவித்ரா, என்.எஸ்.தீபனா ஸ்ரீ, பி.தீபதர்ஷினி, பி.பிரியதர்ஷினி, கே. சபீதா, பி.எஸ்.சர்வேஸ்வரன், பி.எஸ்.தர்ஷனா, எஸ். தர்ஷினி ஸ்ரீ ஆகியோரையும், 494 மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்கள் கே.தீபனா, ஆர். சுதிக்ஷா, எஸ். ஆதிசிவன், எஸ். அர்ச்சனா, எம்.பி.செல்வதமிழ், எஸ். ஸ்ரீகவி, எம். ஹரிஹரசுதன் எம். தனவர்ஷிணி ஆகியோரையும், 491 மதிப்பெண்கள் பெற்ற எம்.பாலாஜி, 490 மதிப்பெண்கள் பெற்ற எம்.எஸ்.அப்ரா யாஸ்மின், 487 மதிப்பெண்கள் பெற்ற எம். அஹீனா, எம். அக்சயஸ்ரீ, 484 மதிப்பெண்கள் எஸ். பவித்ரா ஆகியோருக்கு வி.செந்தில் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.