அக்.6.
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன் முறையாக இன்று மாலை கரூர் வந்தார். கரூரில் உள்ள பயணியர் விடுதியில் கட்சி நிர்வாகிகள் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்தார். கட்சித் தொண்டர்கள் அவருக்கு சால்வை மாலை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர். இந்திய தொழில் கூட்டமைப்பு, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம், கரூர் கொசுவலை உற்பத்தியாளர் சங்கம், பஸ் பாடி உரிமையாளர் சங்கம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு சால்வைகள் மற்றும் பூங்கொத்து அளித்து வாழ்த்தினர்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ் பி. பெரோஸ்கான் அப்துல்லா, உள்ளிட்ட அதிகாரிகள், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் அமைச்சருக்கு சால்வை பூங்கொத்து வழங்கினர். திமுக வினர் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.