தேர்தல் பணிகளை மேற்கொள்வது மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கூட்டங்களை நடத்துவது, வருகை பதிவேடு முறையை நடைமுறைப்படுத்துவது இதில் எல்லாம் செந்தில் பாலாஜி தனக்கென தனிப்பாணி அமைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர். வெளியில் சொல்லாவிட்டாலும், அவரை பின்பற்றியே பலர் கூட்டங்களைக் கூட்டுவது தேர்தல் பணிகளை மேற்கொள்வது போன்றவை செய்து கொண்டுள்ளனர். இவைகளுக்கெல்லாம் எக்ஸ்பர்ட் மட்டுமின்றி பலருக்கு ரோல் மாடலும் செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் இளைஞர் அணி செயலாளர் கூட்டத்தை மாநாடு போல் கரூரில் நடத்திக் காட்டி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் பெயர் வாங்கினார். நேற்று கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டத்தை கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடத்தி கடல் போல் கூட்டத்தை கூட்டினார்.
பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள்
கால்நடை பராமரிப்புத்துறை பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கரூர்...