ஜூன்.26.
கரூரில் கரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது மாவட்ட திமுக பொறுப்பாளர் மின்சார துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி பேசுகையில் தளபதியின் நல்லாட்சிக்கு ஏதோ மணி அடிக்க போவதாக ஒருமணி பேசியிருக்கிறார். .அவர் கிரிப்டோமணியோ, கரன்சி மணியோ தெரியாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. முட்டி போட்டு முதல்வர் ஆனவர் எல்லாம் மக்கள் ஆதரவை பெற்று முதல்வர் ஆகி விடமுடியாது. பகல் கனவு. அது ஒருபோதும் நடக்காது. தமிழகத்தில் தளபதி ஆட்சிதான் தொடர்ந்து நீடிக்கும்.
முதல்வரான பிறகு முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு தளபதி வருகை தருகிறார். அதுவும் அரசு விழாவில் தமிழகத்திலேயே முதல்முறையாக 76ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்டங்களையும் உதவி தொகைகளை வழங்க இருக்கிறார்கள். எனவே அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள் முதியோர் உதவித்தொகை போன்ற அரசு நலத்திட்ட உதவி விடுபட்டிருந்தால் அந்த பட்டியலை வழங்கினால் அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏதுவாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் வெற்றியை மக்கள் வழங்கினார்கள் . அடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப்பெரும் வெற்றி அளித்தார்கள். அடுத்து நமது இலக்கு நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றார்.