ஜூன்.5.
கரூர் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சராகவும் செயல்பட்ட செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவரை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தார். இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் 100% கட்சியை வெற்றி பெற வைத்தார் செந்தில் பாலாஜி. இதனிடையே அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ளார்.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.ஆக இருந்த செந்தில் பாலாஜி தலைமை உத்தரவின் பேரில் 2021 ல் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் களத்தில் கடுமையாக போராடி அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை தோற்கடித்தார். மேலும் கடந்த எம்.பி தேர்தலில் பலம் பொருந்திய அதிமுக மூத்த தலைவர். நாடாளுமன்ற துணை சபாநாயகர்- மாநில ஆளும் கட்சியாக இருந்த தம்பி துரையை தோற்கடித்து ஜோதி மணியை 4லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். அரசியல் பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.
அண்ணாமலையை ஏற்கனவே 2021 அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில்திமுக ஒன்றிய செயலாளர் மொஞ்சனூர் இளங்கோவை நிறுத்தி தோற்கடித்தார். ஓட்டு விபரம்-
மொஞ்சனூர் இளங்கோ திமுக 93369. வாக்கு வித்தியாசம் 24816. சதவீதம் 52.72. அண்ணாமலை பாஜக (அதிமுக கூட்டணி) 68553 வாக்கு சதவீதம் 38.71. உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் செந்தில் பாலாஜி வெளியில் இல்லாத சூழலைப் பயன்படுத்தி அரசியல் கணக்குகளை பலர் போட்டு வைத்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரை செந்தில் பாலாஜி களம் இறக்கினார்.
தேர்தல் முடிவுகள்- கணபதி ராஜ்குமார் – 568200. அண்ணாமலை 450132. ராமச்சந்திரன் (அதிமுக) 236490 கலாமணி (நா.த.க) 82363 வாக்கு வித்தியாசம் 117561.
செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் எம்.பி. தொகுதியிலும் ஜோதிமணியை (காங்) 2 வது முறையாக வெற்றி பெற வைத்துள்ளார். சுணக்கமாக இருந்த கட்சியினர் பின்னர் செந்தில் பாலாஜியே தேர்தலில் நிற்பதாக நினைத்து வேலை செய்தனர்.
தேர்தல் முடிவுகள்-
ஜோதிமணி (காங்) 534906. வாக்கு சதவீதம் 47.25.
தங்கவேல் (அதிமுக) 368090. வாக்கு சதவீதம் 32.52 .
செந்தில்நாதன் பாஜக 102482. வாக்கு சதவீதம் 9.05,
கருப்பையா (நா.த.க) 87503. வாக்கு சதவீதம் 7.73%.
செந்தில் பாலாஜி அடிக்கடி கூறும் வார்த்தைகள்- நாம் எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
ஜெயிக்கிற இடத்தில் போய் நிற்பது வீரமல்ல. நாம் இருக்கிற இடத்தை ஜெயிக்க வைக்க வேண்டும்.
இதில் எவ்வளவோ அர்த்தங்கள் உள்ளது.புரிஞ்சவன் பிஸ்தா என்று கூறிவிட்டு புறப்பட்டனர் நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள்.