பிப்.22.
கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள நாற்பத்தி எட்டு வார்டுகளில் ஒரு வார்டில் திமுக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது. மீதமுள்ள 47 வார்டுகளுக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டன. 44 ஆவது வார்டு தேர்தல் முடிவானது மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வார்டாக அமைந்தது. இங்கு அதிமுக நகர செயலாளர் விசிகே ஜெயராஜ், திமுக சார்பில் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் மோகன்ராஜ் திமுக 1666 வாக்குகள் ஜெயராஜ் 1397 வாக்குகள் பெற்றனர். மோகன்ராஜ் 269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.