ஜூன்.22.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் கரூர் மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா இன்று கரூர் அர்ச்சனா விடுதியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வள்ளிராசன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி, நிர்வாகிகள் தங்கராஜ், சக்திவேல், உமா முன்னிலை வகித்தனர். கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற காமாட்சி, செல்வமணி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ரத்தினம், கோபு, மல்லிகா, ஆகியோருக்கும், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மருதைவீரன், சந்திரா, சீனிவாசன், ராமச்சந்திரன், சதாசிவம், ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றவர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஏற்புரையாற்றினர்.
மாநில பொதுச்செயலாளர் மாரி முத்து, மாநில பொருளாளர் இளங்கோ, அமைப்புச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, இணை செயலாளர் ராஜா, மேனாள் மாநிலத் தலைவர் பீட்டர் ராஜா, தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் பொதுசெயலாளர் தமிழ் மணியன் ஆகியோர் பேசினர். பொன்ராஜ் நன்றி உரை கூறினார்.