டிச.7.
இளம் தலைவர் நாளைய பிரதமர் – பாராளுமன்றம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக திருவண்ணாமலை விழுப்புரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெஞ்சன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
கரூர் மாவட்ட காங்.. அலுவலகத்தில் இருந்து, புயல் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை வாகனங்களில் அனுப்பி வைத்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கரூர் மாநகராட்சி கவுன்சிலரும், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஸ்டீபன் பாபு தலைமை வகித்து கொடி அசைத்து அனுப்பி வைத்தார். விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் செலவில் அரிசி, பருப்பு, பெட்சீட்கள், துண்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது. கரூர் மாநகர காங். தலைவர், நகர துணைத் தலைவர்கள் குமார், கண்ணப்பன், சாந்தோஷ், கருர் மாநகர காங்கிரஸ் வெங்கடேஷ்வரன் சேவா தளம் பிரிவு மாவட்ட தலைவர், தெற்கு நகர தலைவர், தாந்தோணி குமார், கிழக்கு நகரம் சண்முகசுந்தரம் மாவட்ட செயலாளர் கண்ணப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.