கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னை ஐஓபி- புதுடெல்லி இந்தியன் ஆர்மி அணிகள் விளையாடின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம புள்ளிகளை பெற்றதால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சென்னை ஐஓபி அணி வெற்றி பெற்று எல் ஆர் ஜி நாயுடு நினைவு கோப்பை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வென்றது. இந்தியன் ஆர்மி அணிக்கு ரூ. 80,000 மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. சென்னை இந்தியன் வங்கி அணி மூன்றாம் இடம், திருவனந்தபுரம் கேஎஸ் இபி அணி நான்காம் இடத்தை பெற்றன. பெண்கள் போட்டியில் புள்ளிகள் அடிப்படையில்செசகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி முதலிடம் பிடித்து ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு கேவிபி சுழற் கோப்பையை பெற்றது. இரண்டாம் இடத்தை ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணியும், மூன்றாம் இடத்தை கேரளா போலீஸ் அணியும் நான்காம் இடத்தை சென்னை சதர்ன் ரயில்வே அணியும் பிடித்தன. கரூர் கூடைப்பந்து சங்கத் தலைவர் வி என்சி.பாஸ்கர் வரவேற்றார். துணைத் தலைவர் சூரிய நாராயணா, செயலாளர் கமாலுதீன், நிர்வாகிகள் இந்திர மூர்த்தி, ஆடிட்டர் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம், வெங்கடேசன்,அமீன், பெரியசாமி முன்னிலை வைத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், கரூர் வைசியா வங்கி பொது மேலாளர் முரளி ஆகியோர் சிறந்த வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
கரூர் எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள இந்தக் கூடைப்பந்து மைதானத்தை செமி இன்டோர் விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அடுத்த ஆண்டு செமி இன்டோர் விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் அளவிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். தனபதி, செந்தில்குமார், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், மற்றும் காலனி செந்தில், .பிரபு,கலந்து கொண்டனர்.