நவ.12.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைகள், உபகரணங்கள் பெற்று பயனடையலாம் என கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம்:
வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி நபர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.2000 வழங்கும் திட்டத்தில் 2021-2004 ஆண்டு வரை 2504 துர்களுக்கு ரூ170472000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
- கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.2000 வழங்கும் திட்டத்தில் 2021 2024 ஆண்டு வரை 84தர்களுக்கு ரூ24906000நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
- தசை சிறை நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதமித் தொகை ரூ.2000 வழங்கும் திட்டத்தில் 2021-2024 ஆண்டு வரை ரூ.4290600 வழங்கப்பட்டுள்ளது.
தொழுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2000 வழங்கும் திட்டத்தில் 2021 2024 ஆண்டு வரை 140 நபர்களுக்கு ரூ. 7738000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
- முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாவி நபர்களுக்கு மாதாந்திர பணரிப்பு உதவித் தொகை ரூ. 2000 வழங்கும் திட்டத்தில் 2027 2024 ஆண்டு வரை 15 நபர்களுக்கு ரூ. 732000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை
- கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருடாந்திர உதவித் தொகையாக மூன்றாண்டுகளுக்கு 527 பேருக்கு ரூ.2468000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை 184000 வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கடன் மானியம்
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம், மாற்றுத்திறனாளி நபர்களுக்கான வங்கி கடனில் நான்கில் ஒரு பங்கு மானியம் வழங்கும் திட்டம்,
ஆவின் பாலகம் வைப்பதற்கு மானியம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப்பள்ளிகளின் ஆசியர்களுக்கு ஊதிய மானியம், சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம், சாந்தி வனம் மன நலம் பாதிக்கப்பட்டோர் இல்லம், செலவினம், மன வளர்ச்சி குன்றிய நபர்களை மீட்டு எடுத்து இல்லத்தில் சேர்த்தற்கான செலவீனம், மன வளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் செலவினம்,
செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புப் பள்ளி படிக்கும் மாணவியர்களுக்கு உணவூட்டு மானியம், செவித்திறன் குறைபாடுடை இளஞ்சிறார்களுக்கான ஆரம்பகால பயிற்சி மைய சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய மானியம், அறிவுசார் குறைபாடுடைய இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப பயிற்சி மையத்தின் சிறப்பாசிரியர்களுக்கான ஊதியமானியம்,
அனைத்து வகையான உதவி உபகரணங்கள் விவரம்:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பெட்ரோல் ஸ்கூட்டர் 232 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் 175 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிரத்தியோகமாக வடிமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 12 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி ஆப்ரேட்டர் வில்சேர் 28பேருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் வழங்கும் திட்டத்தில் 555 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர சைக்கிள் ஊன்று கோல். சக்கர நாற்காலி மற்றும் காதொலி கருவி உட்பட அனைத்து வகையான உபகரணங்களும் 1099 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அவர்கரூர்