டிச.7.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேற்று சசிகலா சென்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினார். அப்போது லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார். ரஜினிகாந்த், அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.
ரஜினிகாந்த் கலையுலகில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் என சசிகலா தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம் என குறிப்பிடப்பட்டுள்ளது