டிச.23.
சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. சசிகலா இதில் கலந்துகொண்டு ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் வழங்கினார் . பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா கூறுகையில், வெளிநாடு சென்று சிகிச்சை பெற தனக்கு விருப்பமில்லை என ஜெயலலிதா டாக்டர்களிடம் கூறினார். சிகிச்சை அளிக்க வந்த டாக்டர்கள் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லட்டுமா என கேட்ட போது, வேண்டாம் இங்கே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள் என்று கூறிவிட்டார். அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நாள் பார்த்திருந்தோம். எல்லோருக்கும் பரிசு கொடுக்க ஆர்டர் செய்ய வேண்டும் என்றார். அதற்குள் இறந்து விட்டார். நான் பெங்களூர் சிறைக்கு செல்லும் முன்னர் அதிமுகவை ஆட்சியில் அமர வைத்து விட்டு தான் சென்றேன்.
அனைவருக்கும் பொதுவான நபராக நான் செயல்படுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் பணியை தொடங்கி விட்டேன். அதிமுக தொண்டர்கள் நான் இருக்கும் வரை சோர்வு அடைய மாட்டார்கள். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஓபிஎஸ், இபிஎஸ் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும். அதற்குள் எதிர்பாராத விதமாக மறைந்து விட்டார். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.