நவ.26.
கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகையிலைப் பொருட்கள் ஒழிப்பது சம்மந்தமான டி.ஜி.பி. அறிவுரைகள் தொடர்பாக, மத்திய மண்டலம் ஐ.ஜி. டி.ஐ.ஜி. திருச்சி சரகம் ஆகியோரின் உத்தரவுப்படி கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் பிரபாகர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய பொறுப்ப அதிகாரிகள், Durg Inspectors மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் (Food Safety Officers) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் Durg Inspectors, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளடக்கிய 08 சிறப்பு படையும், சரக அளவில் 02 சிறப்பு படையும் உருவாக்கப்பட்டடுள்ளது. இச்சிறப்பு படையினர் கீழ்கண்ட பணியினை மேற்கொள்வார்கள்:
(1) தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டால் மேற்படி கடையின் உரிமத்தை இரத்து செய்யவும் அல்லது இடைநீக்கம் செய்யவும் மற்றும் கடைக்கு சீல் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
(2) இந்த வழக்குகளில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளின் பட்டியலையும் தொகுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையுடன் பகிர்ந்து கொண்டு, தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
(3) கல்வி நிறுவனங்களுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்) 2015 இன் பிரிவு 77 கீழ் நடவடிக்கை எடுத்து விற்பனையாளரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதுடன் மேற்படி கடையையும் சில் வைக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் (Drug Offenders) கீழ் நீதிமன்ற காவலில் அடைக்கப்படுவார்கள். விரைவில் கரூர் மாவட்டத்தை “குட்கா இல்லாத மாவட்டம்” ஆக உருவாக்கப்படும் என கரூர் மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.