நவ.28.
விஜய் ஹசாரே டிராபி -2022 தொடர் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில்நடைபெற்றது. உத்தரப்பிரதேசம் மகாராஷ்டிரா அணிகள் இன்று விளையாடின.
மகாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ருது ராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 159 பந்துகளில் 22 0 ரன்களை குவித்தார். லிஸ்ட் – ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும். போட்டியின் முக்கிய அம்சம் 49 வது ஓவரில் அதாவது ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் ஒருநோபால் அதிலும் ஒரு சிக்சர் ஆக ஏழு சிக்சர்களை பறக்க விட்டு ருது ராஜ் புதிய சாதனை படைத்தார் . உத்தரபிரதேச அணியின் வீர சிவகாசி பேசிய இந்த ஓவரில் 43 ரன்கள் கிடைத்தது.