சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு மிகவும் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். இச்செயலுக்கு தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2017-18ம் ஆண்டில் ரூ.198.31 கோடி.
2018-19ம் ஆண்டில் ரூ.214.38 கோடி.
2019-20ம் ஆண்டில் ரூ.231.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த,தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (சி.ஐ.சி.டி) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான மையத்தின் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழின் மேம்பாட்டிற்கு 2017-18ம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூ.4.65 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.7.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.