கரூர்.மார்ச்.18.
கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியின் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டும் பரப்புரை விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கிராமப்புற முன்னேற்றம் என்ற தலைப்பில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், தமிழர் வாழ்வும் தமிழ்க் கதைகளும் என்ற தலைப்பில் எழுத்தாளர். பவா செல்லத்துரை சொற்பொழிவாற்றினர்.
மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேசுகையில், இந்தியாவில் பெரிய பொருளாதாரத்தில் இரண்டாவதாக தமிழ்நாடு மாறிவிட்டது.
அனைவருக்கும் உணவு அளிக்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் 1974 ல் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு ஒவ்வொரு அரசும் படிப்படியாக கடைகள் அதிகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இதனால் 2 கோடியே 20 லட்சம் அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் உணவு பொருட்கள் வழங்குவதால் பழைய காலத்து சிரமங்கள் இப்பொழுது இல்லை.
. உணவுக்காக யாரிடமும் கையேந்தாத மாநிலம் எதுவென்றால் இந்தியாவிலேயே அது தமிழ்நாடு மட்டும்தான்.
முதலமைச்சர் மு க ஸ்டாலினின் சிறப்பு திட்டமான- அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் புதிதாக இந்த வருடம் 30 ஆயிரம் பேர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். அதேபோல கல்லூரியில் படித்து முடித்துவிட்டு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருந்தார்கள். அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வேலைக்கு செல்வதற்கு எதுவாக நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அரங்கில் கல்வித்துறையில் சார்பாக நான் முதல்வன் திட்டம் குறித்தும், மகளிர் திட்டம், கல்வி கடனுதவி தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி. தொழில் வழிகாட்டல் தொடர்பாக மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட மைய நூலகம் சார்பில் புத்தக கண்காட்சியும் போன்ற கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் .எம்.லியாகத், கவிதா(நிலம் எடுப்பு). தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளர் அட்லஸ் நாச்சிமுத்து, சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.