ஜூன்.19.
கரூர் நகர காவல் சரகம், கொலை முயற்சி குற்றவாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக. பென்சில் (எ) தமிழழகன், 31/, எம்.ஜி.ஆர். நகர், கரூர். ரவுடியான இவர் தனது கூட்டாளிகள் (1) பிரகாஷ், (2) ஹரிஹரன், (3) மனோஜ் ஆகியோருடன் குடிபோதையில் கரூர், லைட் ஹவுஸ் கார்னர் அருகே மலையாளம், 51/ சுக்காலியூர், கரூர் என்பவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தலையில் தாக்கினர். இது தொடர்பாக, கரூர் நகர காவல் நிலையத்தில் 18.06.2025 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடர்புடைய எதிரிகள் (A2) பிரகாஷ், (A3) ஹரிஹரன், (A4) மனோஜ் ஆகியோர் அதே நாளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். A1) பென்சில் (எ) தமிழழகன் தலைமறைவாக இருந்தார். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, 18.06.2025 இரவு 10.30 மணிக்கு , கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எஸ்.ஐ.நாகராஜன், காவலர் ஜெயராமன் ஆகியோர் கரூர் -சேலம் அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலத்தின் கீழ் மறைந்திருந்த பென்சிலை பிடிக்க முயன்றனர். தான் வைத்திருந்த 14 அடி நீள வாளை எடுத்து இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றார். தனது கைத்துப்பாக்கியைக் எடுத்து காட்டி எச்சரித்தபோது தப்பி ஓடியதால் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார் காலில் காயமடைந்த அவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். கரூர் மாவட்ட எஸ்.பி பேரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
குற்றம் சாட்டப்பட்ட பென்சில் (எ) தமிழழகன் மீது கரூர் மாவட்டத்தில் 13 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 01 வழக்குகளும் உள்ளன. மேலும் அவர் “C” பிரிவு ரவுடியும் ஆவார்.