பிப்.1.
கரூர் மாவட்ட ராக்கெட் பந்து சங்கம் மற்றும் தமிழ்நாடு ராக்கெட் பந்து சங்கம் மற்றும் அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து கரூர் மாவட்ட அளவிலான ராக்கெட் பந்து பயிற்சி முகாம் மற்றும் ராக்கெட் பந்து விளையாட்டு அறிமுக விழா வெள்ளியணை ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு கரூர் மாவட்ட ராக்கெட் பந்து சங்க தலைவர் உடற்கல்வி இயக்குனர் அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராஜேந்திரன், துணைத் தலைவர் நல்லுசாமி தலைமையில், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் பிரவீன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், இந்திய அணியின் பயிற்சியாளர் அஜிஷ், அமராவதி கலை, அறிவியல் கல்லூரியின் செயலாளர் நாராயண சுவாமி, கல்லூரி முதல்வர் உஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் மாணவர்களுக்கு முதலில் காணொளி வாயிலாக விளையாட்டின் விதிமுறைகள் விளக்கப்பட்டது. பின்னர் ஆடுகளத்தில் மாணவர்களுக்கு பயிற்சி ஆட்டம் அளிக்கப்பட்டது. இதில் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ராக்கெட் பந்து விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். மேலும் இதில் மாவட்ட அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
மாவட்ட பொருளாளர் வைரப் பெருமாள், துணைச் செயலாளர் மாரிமுத்து, இணைச் செயலாளர் சரண்யா, அமைப்புச் செயலாளர் சதாசிவம், கலந்து கொண்டனர். அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஆனந்த் இந்த விழாவினை நடத்தினார். மேலும் ராக்கெட் பந்தின் மாநில அளவிலான 16 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டானது வருகின்ற மார்ச் 1 தேதி கரூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.