மே.25.
பழனி முருகன் கோவிலுக்கு வந்து கேரளாவைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் துளசி மாலையை கழற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது அவர் அணிந்திருந்த 1-3/4 பவுன் தங்கச் சங்கிலி தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது. இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டார்..
அப்பெண்ணின் ஏழ்மை நிலையை கருதி அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் தனது சொந்த நிதியில் 17.60 கிராம் தங்கச்சங்கிலியை அப்பெண்ணிடம் வழங்கினார். இச்செயலுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.