மார்ச்.13.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட பின்பு எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இது தொடர்பான வழக்கில் மேற்கண்டவாறு அங்க பகரதட்சணம் செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறியது-
கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரன் கோவிலில் ஆண்டு விழாவின் கடைசி நாளில் சாப்பிட்டு விட்டு போட்ட இலையில் பக்தர்கள் படுத்து உருண்டு நேர்த்திக்கடன் செய்யும் ஒரு நடைமுறை கடந்த நூறாண்டுகளாக இருந்து வந்தது. நான் கரூரை சேர்ந்த தலித் பாண்டியன் என்பவரை மனுதாரராக வைத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு உயர் நீதிபதிகள் அமர்வில்
வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றேன்.
அதன்பின்பு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள தனி நீதிபதியிடம் ஒரு மனு கொடுத்து மேற்கண்ட கோவிலில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளலாம் என்று ஒரு தீர்ப்பை பெற்றனர். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசும் மற்றும்
கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதி அரசர்கள் சுரேஷ்குமார் மற்றும்
அருள்முருகன், இன்று பிறப்பித்த உத்தரவில்,
மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி
ஜி.ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த தீர்ப்பு நிலைநிற்கத் தக்கது அல்ல என்று கூறி அத் தீர்ப்பை தடை செய்தும், மேல்முறையீட்டு மனுக்களை அனுமதித்தும் இன்று உத்தரவு பிறப்பித்தனர்.
கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன்…
9787933344
9789433344