நவ.10.
ஐடி வேலை எனக் கூறி தாய்லாந்து, மியான்மருக்கு அழைத்து சென்று ஏமாற்றப்பட்டதால் அங்கு சிக்கி தவித்தனர். அவர்களை அரசு மீட்டுக் கொண்டு வந்துள்ளது. இனியாவது ஏமாறாமல் இருங்கள் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் தகவல் தொழில்நுட்ப வேலைகளில் பணி இருப்பதாக கூறி அழைத்து சென்று அங்கு எல்லை பகுதிகளில் சட்டவிரோத இணையதள வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தினர் வேலையளிப்போர். இதுகுறித்து தமிழக அரசுக்கு தகவல் கிடைத்தது. அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு முதலமைச்சர்அறிவுரைப் படி இன்று 8 இளைஞர்கள் மீட்கப்பட்டனர் . ஏற்கனவே 18 நபர்களை அரசு சார்பில் மீட்டு வந்துள்ளனர். சிறுபான்மை மற்றும் அயலக வாழ் தமிழர்கள்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றார். இனியாவது வெளிநாடு வேலை என்பதை உறுதிசெய்துவிட்டு செல்ல வேண்டும். அங்கே சென்று ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.