ஏப்.8.
கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் உழைப்பாளி நகர் அருகே ஒரு தனியார் கிரசர் உள்ளது . இங்குள்ள கன்வேயர் பெல்டில் பாம்பு ஒன்று சீறிக் கொண்டிருந்தது இதை பார்த்தவர்கள் கரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து கரூர் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.
கன்வேயர் பெல்ட் வெல்டிங் மேல் உயரமான பகுதியில் பாம்பு சீறிக் கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் கன்வேயர் பெல்டில் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பினை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப் பகுதியில் கொண்டு போய் பாதுகாப்பாக விடப்பட்டது.