ஜூன்.7.
ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நல சங்க ஆலோசனை கூட்டம் கரூரில் இன்று நடைபெற்றது. பண்பாட்டு நல சங்கத் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். பண்ணை சொக்கலிங்கம் சிறப்புரையாற்றினார். மணீஷ் மகேஸ்வரன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
வெள்ளாளர் குல வேளாளர்கள் மாநாடு வருகிற டிசம்பர் 28ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பில் வெள்ளாளர் குல வேளாளர்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்து பதிவு செய்ய 42 உட்பிரிவு வேளாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தற்போது தனி தொகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 42 உட்பிரிவு வேளாளர்களை இணைத்து பொறுப்பாளர்களை நியமிப்பது உட்பிரிவு பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் தனி நபர் உறுப்பினராக சேர்ப்பது. சில உட்பிரிவுகள் முற்பட்ட பிரிவில் உள்ளன. அனைத்தையும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைக்க வேண்டும். வேளாளர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வது, உட்பிரிவுகளுக்கு அரசின் வேலைவாய்ப்பு கல்வி ஆகிய ஒதுக்கீடுகளில் 20% ஒதுக்கீடு வேண்டும் மாநில இளைஞரணி செயலாளர் அனிஷ் மகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.