ஜன.26.
கருர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை மற்றும் NCC NSS. Scout JRC யின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சமாதானப் புறாக்களை பறக்க விட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். கரூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அபதுல்லா முனிைலை வகித்தார். மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ. 64,39,147/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக 62 சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்., சிறப்பாக பணிபுரிந்த 32 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த 76 காவலர்களுக்கும், 10 தீயணைப்புத்துறையினருக்கும். பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் என 426 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து குடியரசு தின விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனமும், வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி. காந்திகிராமம் புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளி, மலர் மெட்ரிக். வெண்ணைமலை சேரன் மெட்ரிக். ஆகிய பள்ளிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.