டிச.28.
கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆபீசர்ஸ் கிளப் உள்ளது. நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஆஃபீஸர் கிளப்பில் சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் பல ஆண்டுகளாக அரசுக்கு வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததாகவும் புகார்கள் வந்தன . இதனை அடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று ஆஃபீஸர் கிளப்பில் திடீர் ஆய்வு நடத்தினார்.
வாடகை நிலுவை தொகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் . அனைத்து தரப்பு மக்களும் ஆபீசஸ் கிளப்பை பயன்படுத்தும் வகையில் விளையாட்டு வசதிகள் விரிவுபடுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும் நரிக்குறவ இளைஞர்களுக்கு பயிற்சி பெற துப்பாக்கி சுடும் தளம் அமைப்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.