செப்.25.
மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையில் இருந்து மைசூருக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நீண்ட காலமாக இந்த ரயிலில் முன்புறம் இரண்டு, பின்புறம் இரண்டு என நான்கு முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக முன்பதிவு இல்லாத பெட்டி இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், இவர்கள் தவிர தஞ்சை மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக சென்று வருகின்றனர்.
முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுவிட்டதால், சிக்கி தவித்து வருகின்றனர். ஒரு பெட்டியில் 150 க்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் பரிதாப நிலையில் உள்ளனர். முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை அனைத்து ரயில் நிலையங்களிலும்,. தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
4பெட்டிகள் இருக்கும் என்று நம்பி வந்து நெரிசல் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியது இருக்கிறது. டிக்கெட் கொடுப்பதற்கு முன்பே தெரிவித்து இருந்தால் பேருந்தில் பயணம் செய்திருப்போம் என்ற பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதேபோன்று காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இரண்டு பெட்டிகளாக குறைந்துவிட்டனர். அதிலும் கார்டுக்கான பெட்டியை அவ்வப்போது ஒதுக்கி விடுகின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டி ஒன்னரை என்கிற அளவில் தான் இருக்கிறது. முன்பெல்லாம் ரயில்வே துறை அதிகாரிகள் முன்பதிவில்லாத பெட்டிகளை பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நிர்வாகம் அதனையும் பறித்து விடுகிறது. அதிகப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை. வழக்கம் போல் 4 பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.