மே.18.
கரூரில் மிகவும் பழமை வாய்ந்தது காமராஜ் தினசரி காய்கறி அங்காடி . கரூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. தற்போது கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. காமராஜ் மார்க்கெட்டில் கடைகள் சிதிலமடைந்து புனரமைக்கபடாடாமல் இருக்கிறது. மார்க்கெட்டின் வெளிப்புறத்தில் வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். போதுமான அளவுக்கு காய்கறிகளை கொண்டுவர முடியவில்லை. கரூர் காமராஜ் காய்கறி மார்க்கெட்டை புனரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது தமிழக அரசு காய்கறி சந்தையை புனரமைக்க அனுமதி வழங்கியுள்ளது. ரூ. 6.75 கோடி மதிப்பீட்டில், 75 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட, கரூர் மாநகராட்சி காமராஜர் தினசரி காய்கறி அங்காடியை புனரமைக்கும் பணியை இன்று பூமி பூஜை செய்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். பழக்கடைகள், காய்கறிக்கடைகள், வாழை மண்டிகள், மளிகைக்கடைகள், கறிக்கடைகள், டீக்கடைகள் என மொத்தமாக 174 கடைகளுடன் ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்பட இருக்கிறது. இவ்வளாகத்தினால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவர்.
விழாவில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், எம்எல்ஏக்கள் மொஞ்சனூர்இளங்கோ, சிவகாமசுந்தரி, ஆணையர் ரவிச்சந்திரன், மற்றும் வர்த்தக பிரமுகர்கள் , மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.