பிப்.19.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) இன்று ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுதா தலைமை வகித்தார். லியோ, என்சிசி, ஒய்ஆர்சி, ரோட்ராக்ட் சங்கத்தினர் முகாம் நடத்தினர். முனைவர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் அமிர்தராஜ் வரவேற்று பேசினார். விநாயகம், டாக்டர் ஜெயபிரகாஷ் ரத்த தான முகாம் குறித்து பேசினர். முனைவர் விஷ்ணு தேவன் நன்றி உரை கூறினார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் கவின் சரஸ் மருத்துவ குழுவினர் உதவியுடன் முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமில்100 மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.