ஜன.29.
தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. மதுவிலக்கு காவல்துறை பிரிவின் சார்பில் நடைபெற்ற பேரணியில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகையுடன் வந்தனர். தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் தடுப்பு. மது அருத்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும். மது அருத்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் இந்த பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடங்கி, தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரி வரை சென்று அடைந்தது. பேரணியில் 250 மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைளுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, உதவி இயக்குனர் சரவணன், துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரஷ்யா சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.