பிப்.24.
கரூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மன்றத்தை சுமார் 40 ஆண்டுகாலம் நடத்தி வந்தவர் ரஜினி ராஜா. கரூர் தாலுகாவாக இருந்தபோதே மன்றத்தை நடத்த தொடங்கியவர் மாவட்டமான பிறகு கரூர் மாவட்ட ரஜினி மன்ற தலைவராக இருந்தார். ரஜினி மக்கள் மன்றம் ஆன பிறகு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கரூரில் வசித்து வந்த ரஜினி ராஜா நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக திடீர் மரணம் அடைந்தார் . அவரது மறைவிற்கு அனைத்து சினிமா ரசிகர் மன்றத்தினர் அரசியல் கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.