ஜன.5.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் வந்தன. இது தொடர்பான வழக்கில் ராஜேந்திரபாலாஜி யை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். எனினும் அவர் தலைமறைவாகவே உள்ளார். ஆந்திரா கேரளா கர்நாடகாவில் போலீசார் அவரை தேடி வருகின்றனர் . இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராஜேந்திரபலாஜி வெளிநாடு சென்று விடாமல் தடுப்பதற்காக விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தினர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். அப்போது காரிலிருந்து அவர்களுக்கு சிக்னல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அவரை மடக்கி கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி தமிழகம் கொண்டு வரப்படுகிறார். ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் போலீசார் அவரை மடக்கி உள்ளனர்.
பாஜக மாவட்டத் தலைவர் சிக்குகிறார்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் போலீசாரால் தேடப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராஜேந்திர பாலாஜியை தப்ப வைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பாஜக தலைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.