டிச12.
கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விபரம்- ( மி.மீ)- கரூர் 4, அரவக்குறிச்சி 1.20, அணைப்பாளையம் 2, குளித்தலை 9.60, தோகமலை 23.20, கிருஷ்ணராயபுரம் 8.40, மாயனூர்-7, பஞ்சப்பட்டி 10.40, கடவூர் -4, பாலவிடுதி 6, மைலம்பட்டி 8, மொத்தம் 83.80, சராசரி 6.98,
கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாக உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 4321 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. காவிரி ஆற்றில் 4121 கன அடி திறக்கப்படுகிறது. தென்கரை வாய்க்காலில் 200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் கட்டளை மேட்டு வாய்க்கால் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் கிருஷ்ணராயபுரம் ஆகிய வாய்க்கால்களில் நீர் திறக்கப்படவில்லை.
அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடி. நீர் இருப்பு 87.24 அடியாக உள்ளது. நீர்வரத்து 196 கன அடி. கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் அணை நிரம்பாத நிலை தொடர்கிறது.