மே.30.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 1405 மெட்ரிக் டன்னும். டிஏபி 626 மெட்ரிக் டன்னும். பொட்டாஷ் 1015 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 2066 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 5112 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக CO55, R20. BPT, CO50. CO52 ஆகிய நெல் ரகங்கள் 180 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் கம்பு கோ 10, சோளம்: C032, K12 ஆகியவை 13.00 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிர்கள் உளுந்து -VBN-B&.VBN 10. கொள்ளு பையூர் 2. தட்டைப்பயறு VBN-3 ஆகியவை 36.00 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை K1812, கோ-7. என்-VRI-4 டிஎம்.வி-7 ஆகியவை 5.00 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளன. கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு மே மாதம் வரை 128.68 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு மே-2025 வரை 156.65 மி.மீ மழை பெய்துள்ளது.
விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் தொடர் பயிர் சாகுபடி செய்வதால், பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால், மண்ணின் வளம் குன்றிவிடும். மண்ணின் தன்மையும் மாறுபடும். மண்ணின் வளம் காக்கவும். மண்ணின் நலம் பேணவும் அதிக மகசூல் பெறவும், போதுமான அளவு இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் ரசாயன உரங்களை இடுதல் அவசியமாகிறது. மண் பரிசோதனை செய்து அதற்கேற்றாற் போல் என்னென்ன உரங்களை எவ்வளவு இட வேண்டும் என்பதை துள்ளியமாக அறிந்து பயன்படுத்துவதன் மூலம் பயிரின் தேவைக்கேற்ப உரமிட்டு உற்பத்தியை பெருக்கலாம்.
அதே போல், கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், குளித்தலை. பள்ளப்பட்டி வேலாயுதம்பாளையம், வெங்கமேடு மற்றும் காந்திகிராமம் ஆகிய 6 உழவர் சந்தைகளில் 50.48 மெ.டன் காய்கறிகள் ரூ.25.03 இலட்சம் மதிப்பீட்டில் விற்பனையாகி 10.646 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்
இக்கூட்டத்தில், டிஆர்ஓ. கண்ணன். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தியாகராஜன், வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குநர் நிர்மலா. கால்நடை பராமரிப்புத் துறை (இணை இயக்குநர்) சாந்திகலந்து கொண்டனர்.