அக்.13.
கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை கோட்டியது. மழை அளவு விவரம் (மி.மீ)-
கரூர் 43, அரவக்குறிச்சி 17, அணைப்பாளையம் 23, க.பரமத்தி 49.80, குளித்தலை 44.40, தோகமலை 11.40, கிருஷ்ணராயபுரம் 71, மாயனூர் 72 , பஞ்சப்பட்டி 58, கடவூர் 16.60, பாலவிடுதி 38, மயிலம்பட்டி 29, மொத்தம் 473.20, சராசரி 39.43.
மாயனூர் கதவணைக்கு 19253 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 18483 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்கரை வாய்க்கால் 300, கட்டளை மேட்டு வாய்க்கால் 150, புதிய கட்டளை வேட்டு வாய்க்கால் 300, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் 20 கன அடி தணணீர் திறந்து விடப்படுகிறது.
இன்று அதிகாலை 2-56 மணிக்கு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வலையர் பாளையம் பகுதியில் மிகப்பெரிய சத்தம் காரணமாக வீடுகள் குலுங்கின மாடி கட்டிடங்கள் கடகட என ஆட்டம் கண்டன என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.