பிப்.7.
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியது-
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ஒருவர் மோடியுடன் தோளோடு தோளாக நின்றார். அதானி மோடிக்கு விசுவாசமாக இருந்தார். அதன் விளைவாக குஜராத்தில் அவரது வணிகம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்தது. முதலில் அதானி விமானத்தில் மோடி சென்றார். பிறகு மோடி விமானத்தில் அதானி சென்றார். இவர்களுக்குள் என்ன தொடர்பு?.
2014ல் பிரதமர் மோடி டெல்லி சென்றபோதுதான் உண்மையான மேஜிக் தொடங்கியது. – 2014ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் அதானி 609வது இடத்தில் இருந்தார். மோடி அவர்களின் நட்பின் விளைவு, உலக அளவில் இந்தப் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நடைப்பயணத்தின்போது, எல்ஐசி மற்றும் வங்கிகளின் பணத்தை அரசு ஏன் அதானி போன்ற நிலையற்ற வணிகத்தில் முதலீடு செய்கிறது என்று மக்கள் கேட்டனர். ஆனால் அரசாங்கம் இதற்கான பதில் எதுவும் கூற மறுக்கிறது என்றார்.