பிப்.2.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை. உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு போதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது
தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை .
புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்காவிட்டாலும் வேலை இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நாட்டின் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்து கொள்ள நினைக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும்.
பாஜக மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது என்றார்.