ஜன.31.
அதிமுக உட்கட்சி மோதல் ஒற்றை தலைமை என ஆரம்பித்து, கட்சி சின்னம் முடக்கப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் சின்னத்தை பெறுவதற்காக ஓபிஎஸ்+ இபிஎஸ் தரப்பில் சட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.இதற்காக நவம்பர் மாதமே முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட்டு விட்டது. மக்களவையில் ஒரே உறுப்பினரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு கடிதம் சென்று விடக்கூடாது என எடப்பாடி பெயர் போட்ட கடிதத்தை நவம்பர் மாதமே ராஜ்யசபா எம்.பியான தம்பிதுரை வாங்கி இரகசியமாக வைத்துக் கொண்டார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து இது போன்ற தவறு இனி நடைபெற கூடாது என நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பினார்.
இதனை அடுத்து ரவீந்திரநாத் எம்பி தம்பிதுரை எம்.பி.யின் டெல்லி ‘மூவ்’களை தொடர்ந்து கண்காணித்து இந்த முறை அது எடுபடாமல் முறியடித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தை சமூகமாக நடத்துவதற்காக கட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அதிமுகவின் கட்சித் தலைவர் என குறிப்பிட்டு ரவீந்திரநாத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
ரவீந்திரநாத் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அதிமுக எம்பி யாக கருதக்கூடாது என எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.