ஏப்.5.
உள்ளாட்சி சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற டிஜிட்டல் மயமாக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், சொத்து வரி, குடிநீர் வரி,கடை வாடகை ஆகியவற்றை செலுத்தவும், உரிமம் பெறுவதற்கும், புதுப்பிக்கவும் காலதாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு QR CODE ஸ்கேன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. QR code செய்வதன் மூலமாக உடனடியாக சேவைகளை பெறுவதற்காக ஏற்பாடு* செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக இதை நடைமுறைப்படுத்தும் விதமாக, வீடுகளில் QR CODE ஒட்டும் பணியை மாநகராட்சி மேயர் கவிதா துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மண்டல குழுத் தலைவர் அன்பரசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.