ஜன.23.
கரூர் வாங்கல் காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற புது வாங்கலம்மன் கோயில் அமைந்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தற்போது மீண்டும் திருப்பணி செய்து கும்பாபிஷேக விழா வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று பிரமாண்ட தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. கரூர் பிரேம் மஹாலில் இருந்து புறப்பட்டு ஜவகர் கடை வீதி, ஐந்து ரோடு வழியாக ஊர்வலம் சென்றது. ஆயிரக்கணக்கான பெண்கள், குடிப்பாட்டு மக்கள், தீர்த்த குடம், முளைப்பாரி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .குதிரை காவடி , யானை மீது காவடி, மயிலாட்டம் ஒயிலாட்டம் இடம்பெற்றது.