ஜன.3.
பொய்வழக்கு, ஆள்கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கரூர் – ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி MLA தலைமை வகித்தார், பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் .சீனிவாசன் MLA , முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் MLA , அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் .தங்கமணி MLA, அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கரூர் சின்னச்சாமி, கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினர். திரு விகா, கண்ணதாசன், கமலக்கண்ணன், மாரப்பன், சுப்பிரமணியன், சசிகலா, மார்கண்டேயன், நெடுஞ்செழியன், சேரன் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.