நவ.16.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரியலூரில் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்ததையொட்டி கரூர் வடக்கு காந்திகிராமம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தாய்ர்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தனர்.
தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர், பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவே பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
இதன் அடிப்படையில் 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை அரியலூர் மாவட்டம் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த அதே நாளில் கரூர் மாவட்டத்திலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1207 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் TN ICDS செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசுடன் குடும்பத்தினரும். மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து குழந்தைகளை பராமரிப்பதற்கு அனைவரும் முன்னின்று உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான வளமான மாநிலமாக தமிழ்நாட்டினை நிலை நிறுத்துவதற்கு உறுதி ஏற்போம். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகத்தையும். 1207 குழந்தைகள் கண்டறியப்பட்டு அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடர், ஆவின் நெய், பேரீச்சம் பழம், மல்டி வைட்டமின் சிரப் 2000 ml குடற்புழு நீக்கம் மாத்திரை-1. கப்-1 டவல்-1 ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சரவணன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுவாதி, மண்ட குழு தலைவர் கோல்டஸ்பாட் ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, தியாகராஜன், தங்கராஜ் கலந்து கொண்டனர்.