செப்.16.
கரூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் பிரத்யேகமாக மாற்றுத்திறணளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் தொழில் பயிற்சிகள் நடத்தி வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து 28.09.2024 அன்று கோயம்புத்தூர் சித்தாபுத்தூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வேலை வாய்ப்பு வேண்டி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியரகம், கரூர் முகவரியில் நேரடியாகவோ, அலுவலக தொலைபேசி எண் 04324- 257130-ல் தொலைபேசியிலோ, தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் (மின்னஞ்சல் ddawokarur@gmail.com) மூலமாகவோ தங்களது சுய விவரம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை விபரம் மற்றும் கல்வி தகுதி குறித்த விவரங்களை 26.09.2024 அன்று மாலைக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரூர் மாவட்டத்தில் 20.09.2024- வெள்ளிக் கிழமை அன்று காலை10.00 மணி முதல் 3.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெண்ணமலை. கரூர் மற்றும் 25.09.2024 புதன் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் கரூர் ஆகிய இடங்களில் மாவட்ட அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாமிற்கு கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச் சான்று ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடையுமாறும் மேலும் தகவல்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04324-257130-ல் தொடர்பு கொண்டு விபரம் பெறுமாறும் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.