ஜன.5.பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் இன்று பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார் பிரதமர் மோடி. பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் ஹூசைனிவாலா பகுதியில் 20 நிமிட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.